இதே நாளில் 2018 ஆம் ஆண்டு ஹார்டிக் பாண்டியா செய்த சாதனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார். கபில் தேவுக்கு அடுத்து சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் என்னும் அளவிற்கு அவர் பெயர் எடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு இதே நாளில் செய்த வரலாற்று சாதனை தற்போது தகவலாக பார்ப்போம் வாருங்கள். இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான பாண்டியா இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதே நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சாதனை கிடையாது. ஆனால் அந்த 5 விக்கெட்டுகளைக் எத்தனை பந்தில் ஹாட்ரிக் பாண்டியா வீழ்த்தினார் என்பதே இப்போது நாம் பார்க்க உள்ளோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை வீசி ஹர்டிக் பாண்டியா அந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

pandya 2

பாண்டியா டெஸ்ட் போட்டிக்கு தகுதியானவர் கிடையாது என்று அனைவரும் கூறிவந்த நிலையில் அந்த டெஸ்டில் அபாரமாக செயல்பட்டு அனைவரது முகத்திரையும் தனது திறமையால் வீழ்த்தினார். மேலும் உலக கோப்பை தொடரில் பிரகாசிக்கவில்லை என்றாலும் அதற்கும் முந்தைய அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடி அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று பெயர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement