- Advertisement -
ஐ.பி.எல்

Hardik Pandya : பவுலர்களின் இந்த பலவீனத்தை அறிந்ததாலே என்னால் ரன் குவிக்க முடிந்தது – ஹார்டிக் பேட்டி

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மும்பை அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா. மும்பை அணி 17 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்த போது இறுதியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். இதில் 3 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : இன்றைய போட்டியில் என்னால் ஹிட் பண்ண முடியும் என்று நினைத்தே போட்டியில் இறங்கினேன் மேலும், பயிற்சிலும் ஹிட் செய்தே விளையாடினேன். கடைசி மூன்று ஓவர்களில் நான் நினைத்தது என்னவென்றால் பவுலர்கள் நிச்சயம் தங்களது வேகத்தையும், நம்பிக்கையும் இழந்து தவறு செய்வார்கள் அந்த சமயத்தை பயன்படுத்தி நான் ஹிட் செய்ய நினைத்தேன். அதேபோன்று கடைசி எனது மூளையை பயன்படுத்தி மூன்று ஓவர்களில் சிறப்பாக ஆடினேன் என்று பாண்டியா கூறினார்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by