பாண்டியா பிரதர்ஸ் அப்பாடா என்னமா பிராக்டிஸ் பண்றாங்க. தென் ஆப்பிரிக்கா அவ்வளோதானா ?

- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஹார்டிக் பாண்டியா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைய உள்ளார்.

- Advertisement -

வரும் 15 ஆம் தேதி துவங்க உள்ள முதல் டி20 போட்டியில் ஹார்டிக் பாண்டியா மற்றும் அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களது பயிற்சி வீடியோ சிலவற்றை ஹார்டிக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறோம் என்பதையும் அவர்கள் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில மாத இடைவெளிக்குப் பின்னர் விளையாட இருக்கும் ஹார்டிக் பாண்டியாவின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement