இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் அவரை எதிர்த்து யாரும் இந்த பொறுப்புக்கு போட்டியிட்டு விண்ணப்பிக்கவில்லை.

இருப்பினும் வரும் 23ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது அப்போதுதான் கங்குலியின் தலைவர் பதவி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் கங்குலி குறித்து ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குலியை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பங்கிற்கு கங்குலியை பாராட்டியுள்ளார். அதில் நீங்கள் ஒரு தலைவர் மற்றவர்களை விட அதிகாரம் மிக்க தலைவர் வருங்கால பிசிசிஐ தலைவராக வர இருப்பதற்கு வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் வளம் பெற வாழ்த்துகிறேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
You are a leader who empower others to be a leader congratulations @SGanguly99 for becoming @BCCI president..I wish you all the best going forward.. ???????????? pic.twitter.com/l2Xj2rIahR
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 16, 2019
இதற்கு கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலளிக்கையில் : மிக்க நன்றி பஜ்ஜி இந்திய அணி போட்டிகளில் வெற்றி பெற ஒரு முனையிலிருந்து நீங்கள் சிறப்பாக பந்துவீசியது போலவே உங்கள் ஆதரவையும் எங்களுக்கு தாருங்கள் என்று கங்குலி பதிலளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



