கொரோனா முடிஞ்சி விவசாயியாக மாறி ஏழைகளுக்கு உதவ போகிறேன் – இந்திய வீரர் அதிரடி முடிவு

Raina
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் மக்களின் மனநிலை ஒருபக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது .மேலும், பொருளாதார சிக்கல்களும் அவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு சிலர் இருக்க ஒரு சிலர் இந்த வைரஸ் கடவுளால் கொடுக்கப்பட்டது எனவும், மக்களை சோதிப்பதற்காக கடவுள் இதனை அனுப்பி வைப்பார் எனவும் கூறிவருகின்றனர்.

Corona-1

- Advertisement -

இதேபோல் ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடள் செய்தனர். அதில் ஹர்பஜன்சிங் இவ்வாறு பேசியுள்ளார். மனிதர்களுக்கு சில பாடம் தேவைப்பட்டது. அதன் காரணமாகவே கடவுள் கரோனா வைரசை பூமிக்கு அனுப்பி இருக்கிறார்.

நாம் அனைவரும் வீட்டில் இல்லாமல் பணத்தின் பின்னாலேயே ஓடி பேராசையுடன் வாழ்ந்து வந்தோம். கரோனா வைரசை கொடுத்து பணம் மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார் கடவுள். ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டும் எளிமையாக வாழ வேண்டும் என்று கரோனா நமக்கு கற்று கொடுத்துள்ளது.

Ashwin-Harbhajan

நான் தற்போது வரை சம்பாதித்த பணத்தை எனது வாழ்நாளில் என்னால் செலவு செய்ய முடியாது. அந்த அளவிற்கு எனக்கு பணம் தேவையில்லை. நமக்கு தேவை இப்போது பிறர் மீதான அன்பும் அரவணைப்பும் தான். இந்த வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர் நான் பஞ்சாப் சென்று நிறைய நிலம் வாங்குவேன். காய்கறிகள், கோதுமை ஆகியவற்றை பயிரிட்டு விவசாயியாக மாறப் போகிறேன்.

- Advertisement -

விளையும் அனைத்தையும் கோயில்களுக்கும் ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்க போகிறேன். பணத்தை தேடி அலைந்தது எனக்கு போதும், எனக்கு இனிமேல் இதில்தான் திருப்தி வரப்போகிறது என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். ஹர்பஜனின் இந்த உரையாடலுக்கு கமெண்டுகள் அதிகளவு குவிந்து வருகின்றன.

Harbhajan

மேலும் அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் அதிகளவு வரவேற்பினையும் அளித்து வருகின்றனர். ஹர்பஜனின் இந்த கருத்துக்கள் அனைத்தும் நிஜத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படி சொல்வதற்காவது உங்களுக்கு மனம் இருக்கிறதே என்று ஹர்பஜனின் இந்த பதிவினை அதிகஅளவு பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement