இந்த ஒரு கோப்பையை மட்டும் ஜெயிச்சா போதும் கோலி புகழின் உச்சத்திற்கு செல்வார் – ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன் மெஷின் என்ற பட்டத்தைப் பெற்றவர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் டி20 தொடர்களில் ரன் மழை பொழிவது இவரது சிறப்பு .இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் அவரது தலைமையிலான அணி இன்னும் ஒரு கோப்பையை கூட வெல்லாமல் உள்ளது.

Kohli 3

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஐ.சி.சி நடத்தும் கோப்பையை கைப்பற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறியுள்ளார். தற்போது நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான அணி பங்கேற்கவுள்ளது.

இதையடுத்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் விராட் கோலி தனது குழந்தை பிறப்புக்காக தாயகம் வருவதாக அறிவித்திருந்தார். இருந்தும் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி வீரர்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே தங்களது பயிற்சியை தொடரமுடியும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரிய ஆட்டக்காரராக ஜொலித்து வருகிறார்.

Kohli

இவரது சாதனைகளுக்கு ஈடு இணையே கிடையாது எனவும் அவர் வருகின்ற அனைத்து தொடர்களிளும் வெற்றிவாகை சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையடுத்து அந்த வெற்றியானது விராட் கோலியின் பெயருக்கு மேலும் புகழை சேர்க்கும் என தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Kohli-4

இருந்தும் விராட் கோலி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய தனது அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்துச்செல்வார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement