தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்.!

harbhajan-sing
- Advertisement -

முத்தமிழ் அறிஞர், திமுக கட்சியின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் இறப்பு செய்தி தமிழகத்தையே உலுக்கி உள்ளது. பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

kalaingar

- Advertisement -

மேலும், இந்தியாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் கலைஞர் அவர்களின் மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரின் இறப்பிற்கு தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் கலைஞர் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ஹர்பஜன் ‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் ‘என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங், இந்த தொடர் ஆரம்பதித்த நாளிலேயே, தான் தமிழ் மொழியை கற்று வருவதாக அறிவித்திருந்தார். அதே போல தனது ட்விட்டர் பக்கத்தை தமிழ் தெரிந்த ஒரு அட்மினை வைத்து பராமரித்து வந்தார்.

அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து வரும் ஹர்பஜன் தமிழிகத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் தமிழில் குரல் கொடுத்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கலைஞர் அவர்களின் மறைவிற்கு தமிழில் ட்வீட் செய்து தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement