உலகக்கோப்பை தோல்விக்கு தோனி காரணமில்லை. இந்த இருவரே காரணம் – ஹர்பஜன் குற்றசாட்டு

Harbhajan

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி யோடு தோற்று வெளியேறியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வீரரான தோனியை அனைவரும் காரணம் காட்டி வருகின்றனர். மேலும் அவரை ஓய்வு பெறச் சொல்லி அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.

Dhoni

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் மெதுவாக இருந்தாலும் அவரை தோல்விக்கு காரணம் காட்டுவது சரியானது கிடையாது.

உலககோப்பை தொடரில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர் உடன் விளையாடியது. மற்ற அணிகள் ஒரு சுழல் பந்துவீச்சாளர்களை விளையாடிய நிலையில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர் விளையாடியது தவறான விடயமாகும். கடந்த இரண்டு வருடமாக இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களாக திகழும் சாகல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் சாதிக்கவில்லை.

மேலும் குல்தீப் 10 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்தார். சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை எடுத்தார். இவர்கள் இருவரையும் இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தவில்லை. இவர்கள் இருவரும் நிச்சயம் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை தேடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இருவரையும் இந்திய அணி சரியாக கையாளவில்லை இதுவே இந்த தொடரில் இந்திய அணி தோற்க பெரிய பின்னடைவாக இருந்தது என்று ஹர்பஜன் கூறினார்.