அணியில் இருந்தும் இவரை களமிறக்காதது வருத்தம் அளிக்கிறது. ரொம்ப பாவம் அவர் – ஹர்பஜன் வருத்தம்

Harbhajan
- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. தற்போது 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து தொடரிலும் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். குல்தீப் யாதவ் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங் கூறுகையில் :

Kuldeep

“இந்திய அணியின் இந்த முடிவு சரியில்லை. சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்த்து விளையாடும் லெவலில் சேர்க்காமல் இருப்பது சரியானதா ? முதல் டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதால் இணைக்கப்பட்ட நதீம்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் குறைகள் இருப்பது போல் தெரியவில்லை.

umesh kuldeep

குல்தீப்பை அணியில் சேர்த்தால் அணிக்கு பலம் சேரும். இவர் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து வெளியே அமர வைப்பது அவரது மன உறுதியை சோதிக்கும். எனவே குல்தீப் யாதவை விளையாடும் லெவலில் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும்” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

Advertisement