Worldcup : இங்கிலாந்து அணி பலமாக இருப்பதால் கோலி மட்டுமல்ல இவர்களின் மீதும் அதிக அழுத்தம் இருக்கும் – ஹர்பஜன்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Harbhajan-singh
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

india

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய அணி உலக கோப்பை தொடரில் சந்திக்க இருக்கும் சவால்கள் இது ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி கோப்பையை வெல்ல தகுதியான அணிதான் இருப்பினும் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் சொந்த மைதானம் காரணமாக இங்கிலாந்து அணி பலமாக இருக்கும். மேலும் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

england

அந்த அணியின் வீரர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். எனவே இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் போட்டி முக்கியமான போட்டியாக இந்த தொடரில் இருக்கும் அதுமட்டுமின்றி அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடி வருவதால் இந்த உலக கோப்பை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். மேலும் இந்த தொடரில் கோலிக்கு மட்டும் அழுத்தம் இல்லாமல் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் அழுத்தம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

worldcup

இந்த தொடரில் முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து அணி சாதிக்க வேண்டும் என்று அந்த அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கோலி தலைமையிலான அணி சிறப்பாக ஆடி வருகிறது. அதனால் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பலாம் என்றும் ஹர்பஜன் கூறினார்.

Advertisement