அடுத்த வருஷம் நான் ஆடுவேனான்னு தெரியல. சீனியர் வீரர் மனம்திறந்த பேட்டி – விவரம் இதோ

- Advertisement -

நடப்பு 14-ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இன்னும் சில நாட்களுக்குள் இந்த எஞ்சியுள்ள தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் முடிவடையும். அதனை தொடர்ந்து உலகக்கோப்பை தொடரானது அங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு 10 அணிகளாக கலந்துகொள்ள இருக்கின்றன.

IPL
IPL Cup

அதற்கான ஏலமும் விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள இருப்பதால் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படி ஏலம் மூலம் வீரர்களின் தேர்வு நடைபெறும் போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதன் காரணமாக சீனியர் வீரர் பலர் ஏலத்தில் எடுக்கப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் பல மூத்த வீரர்கள் தங்களது வாய்ப்பை இழக்க உள்ளனர்.

- Advertisement -

அந்த பட்டியலில் வாய்ப்பை இழக்க இருக்கும் ஒரு வீரரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த ஹர்பஜன்சிங் தனது எதிர்காலம் குறித்து மனம்திறந்த பேட்டியை அளித்துள்ளார். இந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் தனது எதிர்காலம் குறித்து கூறுகையில் : ஒரு வீரராக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதை நான் கொல்கத்தா அணியுடன் இனிமையாக செலவிட்டு வருகிறேன்.

harbhajan 1

அடுத்த சீசனில் நான் விளையாடுவேனே என்பது எனக்கு தெரியாது. நிச்சயமாக விளையாடும் வாய்ப்பு இருந்தால் விளையாடுவேன் என்று கூறினார். மேலும் பயிற்சியாளர் அல்லது வழிகாட்டி மாதிரியான பொறுப்பை செய்வீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை,. நிச்சயம் அது போன்ற வாய்ப்பு அமைந்தால் அதை நான் செய்வேன்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : தீபக் சாகர் மற்றும் அவரது காதலிக்கு கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய – சி.எஸ்.கே வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னால் எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் நான் உதவ தயாராக உள்ளேன். அது பயிற்சியாகளராக இருந்தாலும் சரி, ஆலோசகராக இருந்தாலும் சரி சந்தோஷத்துடன் செய்வேன் என்று கூறியுள்ளார். மொத்தம் 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement