MS Dhoni : தோனிக்கு இந்த சுதந்திரம் மட்டும் கிடைத்தால் அவர் பொளந்து கட்டுவார் – ஹர்பஜன் நம்பிக்கை

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

dhoni
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

dhonistand

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தோனியின் பேட்டிங் முறை குறித்து ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி இந்திய அணிக்காக விளையாடும் பொழுது எப்பொழுதும் முதலில் பொறுமையாக விளையாடி பின்பு வெற்றி இலக்கினை அருகில் கொண்டு வந்து அதிரடியாக ஆடி போட்டியை முடித்து வைப்பார் இதுவே அவருடைய வழக்கமாக இருக்கிறது.

yuvidhoni

ஆனால் அவருடைய ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் களம் இறங்கிய உடனே அதிலேயே காட்டி இருப்பார் அவ்வாறு அவர் அதிரடியாக ஆடும் போது அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும். அதுபோன்று நடக்கவிருக்கும் உலக கோப்பையில் அவருடைய பேட்டிக்கு முழு சுதந்திரத்தை இந்திய அணி அளித்தால் அவர் எந்தவித பதற்றமும் இன்றி முதல் பந்தில் இருந்து அடித்த அடி பெரிய இலக்கினை அடிக்க உதவுவார். மேலும், இங்கிலாந்து மைதானங்கள் ரன்களை அதிகம் கொடுக்கும் மைதானங்கள் எனவே அவர் அதிரடியாக ஆடினால் இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை எளிதாக இந்திய அணி தேசிங் செய்ய அவர் மிகப்பெரிய பக்கபலமாக இருப்பார் என்பது மட்டும் உறுதி என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

Advertisement