எச்சில் தடவக்கூடாது சொல்லிடீங்க. அப்போ இந்த ரூல்ஸ் போடுங்க பேலன்ஸ் ஆய்டும் – ஐ.சி.சி க்கு யோசனை கொடுத்த ஹர்பஜன்

Harbhajan

கொரோனா வைரஸ் எச்சில் மூலம் மிக வேகமாக பரவுவதால் கிரிக்கெட்டில் புதிய ஒரு விதியைக் கொண்டு வர ஐசிசி திட்டமிட்டுள்ளது. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக பந்தில் எச்சில் தடவக் கூடாது என்று ஐசிசி விதியை அறிவிக்க உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்த பல்வேறு கருத்துக்கள் இந்த யோசனை குறித்து எழுந்து கொண்டுதான் வருகின்றன.

Harbhajan

பலரும் பல யோசனைகளை கூறிவரும் வேளையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது யோசனையை தெரிவித்துள்ளார். எச்சிலை பயன்படுத்தாவிட்டால். அந்து தனது பலபலக்கும் தன்மையை இழந்துவிடும். இதனால் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படும். அதே நேரத்தில் பந்தை சரியாக வீச முடியாது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகி விடும்.

ஏற்கனவே விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ள நிலையில் இது இன்னும் பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு ஆடுகளத்தின் இரண்டு முனைகளிலும் புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இரண்டு பக்கத்திலும் புதிய பந்துகளை பயன்படுத்தினால் இந்த பிரச்சனை முடிந்துவிடும்.

அதே நேரத்தில் பந்தும் அவ்வளவு சீக்கிரம் தேய்ந்து விடாது. ஒரு ஆட்டத்திற்கு இரண்டு பந்துகள் என்று பயன்படுத்தினால் மிகவும் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.
இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டால் கண்டிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு இது சாதகமாகவே அமையும். பந்து 50 ஓவர் முடியும் வரை நன்றாக ஸ்விங் ஆகும்.

- Advertisement -

மேலும் எச்சிலும் தேவையில்லை. இது கிட்டத்தட்ட சரியான முடிவாகத்தான் இருக்கிறது .ஆனால், இதுகுறித்து ஐசிசி எடுக்கும் ,முடிவே இறுதியானது என்பதனால் அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் காலியான மைதானத்தில் நடைபெறவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ind

பந்தில் எச்சில் தேய்த்து துடைத்தால் தான் பந்து பளபளப்பாகி அதிக ஸ்விங் ஆகும் தன்மைக்கு மாறும் அதனாலே பவுலர்கள் பந்தினை அடிக்கடி தேய்த்த வண்ணம் இருப்பார்கள். பந்து தனது பளபளப்பை இழந்து பழையதாக மாறினால் அது முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.