அவர் தான் வருங்கால கேப்டன்.. அதுக்குன்னு கில்லுக்காக ஜெய்ஸ்வாலை லெவனில் விட்றாதீங்க.. ஹர்பஜன் பேட்டி

Harbhajan SIngh 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஜெய்ஸ்வால் பேக்-அப் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் திறமையான ஜெய்ஸ்வால் எப்படியாவது பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் சுப்மன் கில் வருங்கால கேப்டன் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வருங்கால கேப்டன்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாம் சொன்னோம். ஆஸ்திரேலியாவில் அபாரமாக விளையாடிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்த தயாராக இருப்பதை காண்பித்தார். அதனால் தற்போது தேர்வாகியுள்ள அவர் பிளேயிங் லெவனிலும் விளையாட வேண்டும். ஆனால் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர் தான் துவக்க வீரராகவும் விளையாடுவார்”

“ஜெய்ஸ்வால் துவக்க வீரராகவும் கில் 3, கோலி 4வது இடங்களில் விளையாடுவார்கள் என்றும் உங்களால் சொல்ல முடியாது. அப்படி நடந்தால் ஸ்ரேயாஸ் எப்படி விளையாட முடியும். ஆனால் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் போன்றவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை கில் துணை கேப்டனாக இல்லாமல் இருந்தால் ஜெய்ஸ்வால். ரோகித் – ஜெய்ஸ்வால் ஓப்பனிங், கோலி 4, ஸ்ரேயாஸ் 5வது இடத்தில் விளையாடுவார்கள்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் இடம்:

“ஆனால் தற்போது உங்களுடைய துணை கேப்டன் வெளியே உட்கார முடியாது. அடுத்த 6 – 8 மாதங்களில் மாற்றங்கள் நடைபெறும் போது சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறலாம். அதனாலேயே தற்போது அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் ஜெயஸ்வால் விளையாடுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: துபாயில் அந்த மாதிரி துருப்புச்சீட்டை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு.. 360 டிகிரி சூரியகுமார் பற்றி சுரேஷ் ரெய்னா

“ஓப்பனிங்கில் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது முக்கியம். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த உலகக் கோப்பையில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததால் விளையாடுவதற்கு தகுதியானவர். அவரை விட சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அதே சமயம் எப்படியாவது ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும். அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement