தோல்விக்கு காரணம் அஷ்வின் தான், அவரை மாத்துங்க – சைக்கிள் கேப்பில் வன்மத்தை காட்டிய முன்னாள் இந்திய வீரர்

ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அடுத்தடுத்து தோற்கடித்தது. அதனால் ஹாட்ரிக் வெற்றியை வெற்றியை பதிவு செய்யுமா என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 20 ஓவர்களில் 133/9 ரன்கள் சேர்த்தது.

IND vs SA VIrat Kohli Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உட்பட டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 49/5 என தடுமாறிய இந்தியாவை வேறு ஏதோ பிட்ச்சில் விளையாடுவது போல் அட்டகாசமாக செயல்பட்டு காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குவித்தார். அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவும் குயின் டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்களின் சொதப்பலால் 24/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தடுமாறியது.

சைக்கிள் கேப்பில்:
ஆனால் மிடில் ஆடரில் ஐடன் மார்க்கம் 52 (41) ரன்களும் டேவிட் மில்லர் 59* (46) ரன்களும் குவித்ததால் போராடி வென்ற அந்த அணி குரூப் 2 புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய இந்தியா அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போட்டியில் பேட்டிங் சொதப்பியதால் பந்து வீச்சை குறை சொல்ல முடியாத அளவுக்கு பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

Ashwin

இருப்பினும் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இதர பவுலர்களை காட்டிலும் 4 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்து 10.75 என்ற எக்கனாமியில் கொஞ்சம் சுமாராகவே செயல்பட்டார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு பதில் யுஸ்வென்ற சஹாலை சேர்க்க வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் இடத்தில் சஹாலை கொண்டு வர வேண்டுமென்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர். நீங்கள் 2 – 3 விக்கெட்டுகளை எடுத்தால் ரன்கள் கொடுப்பதை பற்றி கவலைப்பட கூடாது. அந்த வகையில் சஹால் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவர் உலக அளவில் டி20 கிரிக்கெட் தரவரிசையில் உயரே ஜொலிக்கும் பவுலர்”

- Advertisement -

“ஆனால் அனுபவத்தை வைத்து அஷ்வினை அவர்கள் தேர்வு செய்துள்ளதாக நினைக்கிறேன். மேலும் எதிரணியில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் எதிரே யார் இருந்தாலும் சஹால் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றவர். சஹால் விக்கெட்டுகளை எடுத்து தனக்கான பெயரை உருவாக்கியுள்ளார். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் தன்னை மேட்ச் வின்னராக நிருபித்துள்ளார். எனவே அவரை விட சிறந்த லெக் ஸ்பின்னர் இந்திய அணியில் இல்லை என்று நினைக்கிறேன். அவரைப் போட்டியில் தேர்வு செய்யாதது பெரிய தவறாகும். நானாக இருந்தால் அதை நடக்க விட்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்.

Harbhajan

ஆனால் இப்போட்டியில் 1 விக்கெட் எடுத்த அஷ்வின் பந்து வீச்சில் முக்கிய நேரத்தில் மார்க்கம் கொடுத்த கேட்ச்சை விராட் கோலி தவற விட்டதால் ஒரு விக்கெட் போனதுடன் அதிக ரன்களும் அவரது கணக்கில் சேர்ந்தது. அத்துடன் சமீப காலங்களில் பந்து வீச்சில் சஹால் சுமாரான பார்மில் இருப்பதுடன் பேட்டிங்கில் ஒருசில பந்துகளை கூட எதிர்கொள்ள திணறுபவராக உள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் பேட்டிங்கில் அஷ்வின் காப்பாற்றியதையும் இப்போட்டியில் 7 (11) ரன்கள் எடுத்ததையும் ஹர்பஜன் சிங் மறந்து விட்டாரா என்று கேட்க தோன்றுகிறது. அத்துடன் சுமாரான தொடக்கம் மற்றும் பினிஷிங் செய்ய தவறிய கேஎல் ராகுல் – தினேஷ் கார்த்திக் ஆகியோரை தாண்டி அஷ்வின் தான் தோல்விக்கு காரணம் என்ற வகையில் இவர் பேசியுள்ளார். அதை பார்த்தால் அவருடைய கேரியரின் கடைசி காலத்தில் அஷ்வினுக்காக இவரை கழற்றிவிட்ட வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு பேசுவது தெளிவாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

Advertisement