Harbhajan Singh : களத்தில் சண்டை போட்டாலும் வெளியில் சி.எஸ்.கே அணி இவ்வாறே நடந்து கொள்ளும் – ஹர்பஜன் ட்வீட்

நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு எதிரான கடைசி ஓவர் பெரிய சர்ச்சை விவகாரமாக மாறியது. ஏனெனில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து மார்பு உயரத்துக்கு மேல் வந்தும் அம்பயர்

Harbhajan
- Advertisement -

நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு எதிரான கடைசி ஓவர் பெரிய சர்ச்சை விவகாரமாக மாறியது. ஏனெனில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து மார்பு உயரத்துக்கு மேல் வந்தும் அம்பயர் நோபால் தர மறுத்தார். இதனால் தோனி மைதானத்திற்குள் வந்து அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்தும் சி.எஸ்.கே அணி குறித்தும் சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : களத்தில் மோதிக்கொண்டாலும் வெளிய வந்தால் வெள்ளந்தியாக சிரிப்போம் என்று தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்

மேலும்,நாங்க வந்தது வேணும்னா ஜெய்ப்பூரா இருக்கலாம். ஆனால், இங்கயும் எங்க தர்பார் தான் என்றும், நாங்கள் தூள் கிளப்பாத இடமும் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

rahane

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

Rayudu

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement