- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பந்தையே சுழற்ற தெரியாத இவரை எதுக்கு அணியில் வச்சிருக்க ? வேற ஆளே கிடைக்கலையா – ஹர்பஜன் ஆவேசம்

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளது. தற்போது 12 ஆம் தேதி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்திய டி20 அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த பல மாதங்களாகவே இந்திய அணி சிறப்பான டி20 அணியை தேர்வு செய்வதற்காக பல சோதனைகளை செய்தது.

- Advertisement -

மேலும் இதில் முக்கிய விடயமாக பார்க்கப்படுவது யாதெனில் ஸ்பின்னர் இரண்டு பேருக்கும் பேட்டிங் தெரியவேண்டும் என்ற கோட்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பேட்டிங் தெரிந்த இருவரே அணியில் சுழற்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்ற திட்டம் இந்திய அணியிடம் உள்ளது. அதன்படி தற்போது இந்திய அணியில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தரால் ஓரளவு பேட்டிங் செய்ய முடியும் என்றால் அவரை விட அபாரமாக பந்து வீச கூடிய திறமையான வீரர்கள் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். சபாஷ் நதீம் மற்றும் சக்சேனா போன்ற வீரர்கள் முதல்தர போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி சக்சேனா பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர். இவர்களின் மீது ஏன் தேர்வுக்குழுவின் பார்வை படவில்லை. அவர்களை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறார்கள் ? என்று தெரியவில்லை. தொடர்ந்து வாஷிங்டனுக்கு வாய்ப்பு கொடுப்பதன் காரணம் என்ன என்று கூறியுள்ளார்.

மேலும் பந்தையே சுழற்ற தெரியாத வாஷிங்டன் சுந்தருக்கு அடிக்கடி வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை ? அவரால் ஓரளவு பேட்டிங் செய்ய முடியும் என்றால் அவரை விட அபாரமாக பந்து வீசி நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை. சக்சேனா என்ன தவறு செய்தார் என்பதும் எனக்கு தெரிந்தாக வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by