- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கண்டிப்பா அஷ்வினோட இடத்தை எதிர்காலத்தில் நிரப்பப்போவது இவர்தான் – ஹர்பஜன் சிங் கணிப்பு

இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வரும் தமிழக அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 800 விக்கெட்டுகளை மேல் வீழ்த்தியுள்ள அவர் இன்றளவும் இந்தியா டெஸ்ட் அணியின் முதன்மை வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

அஷ்வினோட இடத்தை நிரப்பப்போவது இவர்தான் :

ஆனாலும் தற்போது 38 வயது எட்டியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்பதனால் அவருக்கான மாற்றுவீரரை தற்போது இந்திய அணி தேர்வு செய்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் மற்றொரு இளம் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை தான் இந்திய அணி அடுத்த அஸ்வினாக தேர்வு செய்துள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணியில் தற்போது வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டுள்ளது ஒரு நீண்ட கால வீரர்களுக்கான தேடலின் அடிப்படையில் தான்.

தற்போது 38 வயதினை எட்டியுள்ள அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற வேண்டிய கட்டத்தில் இருக்கிறார். அதனால் எப்போது அஸ்வின் ஓய்வு பெறுகிறாரோ அப்போது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம் பெறுவார் என்று நினைக்கிறேன். அதற்காகவே இந்திய அணி அவரை தயார் செய்து வருகிறது.

- Advertisement -

பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் மூத்த வீரர்களுக்கான சரியான மாற்றுவீரர்களை கண்டுபிடித்து வருகிறார். அந்த வகையில் அஸ்வின் மட்டும் அல்லாமல் ஜடேஜா, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்பதனால் அவர்களுக்கான மாற்று வீரர்களையும் அடையாள காண வேண்டிய பொறுப்பு கம்பீரிடம் உள்ளது.

இதையும் படிங்க : 77/2 டூ 108 ஆல் அவுட்.. ஜிம்பாப்வே அணியிடம் வீரத்தை காட்டிய பாகிஸ்தான்.. டி20யிலும் அசத்தல் துவக்கம்

அந்த வகையில் தற்போது அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சரியான மாற்றுவீராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்று தான் கருதுவதாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் கூறியது போல தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்க்டன் சுந்தர் தான் பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -