இவர் என்ன பாவம் பண்ணாரு டீம்ல எடுக்கமாட்றீங்க. அவரோட டொமஸ்டிக் ரெகார்ட் பாருங்க – ஹர்பஜன் கோபம்

Harbhajan

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 கொண்ட தொடர்களில் விளையாட தற்போது ஆயத்தமாகி விட்டது. தற்போது துபாயில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் நேரடியாக அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்று விடுவார்கள்.

INDvsAUS

அதன் பின்னர் 2 மாதகால அளவில் மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது. இதற்கான அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக 16 பேர் கொண்ட அணி தான் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை 32 பேர் கொண்ட ஒரு மிகப் பெரிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனியாக மூன்று விதமான போட்டிகளுக்கும் எந்தெந்த வீரர்கள் ஆடுவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் இளம்வீரர் சுப்மான் கில், வருண் சக்கரவர்த்தி, தங்கராசு நடராஜன் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த பல வருடங்களாக உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் தனது திறமையை வெளிக்காட்டி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த அணியில் இடம்பெறவில்லை. இதற்கு காரணங்களும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

- Advertisement -

அவரது ட்விட்டர் பக்கத்தில் : இதற்கு மேல் சூர்யகுமார் யாதவ் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு மேலும் என்ன செய்ய வேண்டும். அவரது உள்ளூர் போட்டி புள்ளி விவரத்தையும், ஐபிஎல் போட்டி புள்ளி விவரத்தையும் இந்திய தேர்வு குழுவினர் எடுத்து பார்க்க வேண்டும் என்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருக்கிறார்.