- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் தொடரை வைத்தே சுப்மன் கில்லின் திறனை சோதிக்க கூடாது.. கொஞ்சம் டைம் குடுக்கனும் – ஹர்பஜன் சிங் கருத்து

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர்.

ஒரு தொடரை வைத்து சுப்மன் கில்லை எடை போடக்கூடாது : ஹர்பஜன் சிங்

இதன் காரணமாக எதிர்வரும் இந்த தொடரானது இந்திய அணிக்கு சவாலான தொடராக மாறியுள்ளது. ஏனெனில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த இளம் இந்திய அணியால் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் என்ற ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களின் இடத்தை நிரப்புவது எளிது கிடையாது என்றும் அதனால் முதல் டெஸ்ட் தொடரிலேயே சுப்மன் கில்லின் கேப்டன்சியை எடை போடக்கூடாது என்றும் அவருக்கு நாம் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய சவால் தான். அதேபோன்று தனிப்பட்ட முறையில் கேப்டனாக சுப்மன் கில்லுக்கும் இது மிகப்பெரிய சவால். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க ஒரு வாய்ப்பும் அவருக்கு இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இளம் வீரர்களை கொண்ட இந்த அணியை வைத்துக்கொண்டு அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இருந்தாலும் அனுபவ வீரர்களின் இடத்தை இளம் வீரர்கள் நிரப்புவது என்பது சாதாரண விடயம் கிடையாது.

இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயிங் 12-யை தேர்வுசெய்து அறிவித்த இர்பான் பதான் – லிஸ்ட் இதோ

எனவே இந்த ஒரு தொடரை மட்டும் வைத்து அவரை எடை போடாமல் அவருக்கு நாம் இன்னும் சில காலம் வாய்ப்பினை தொடர்ந்து வழங்க வேண்டும். நம்முடைய ஆதரவு அவர்களுக்கு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இளம் வீரர்களால் இன்னும் பெரியளவில் சாதிக்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -