பிங்க் பால் ஒன்றும் சாதாரண பந்து கிடையாது. நிச்சயம் இந்த சவால்கள் இருக்கும் – ஹர்பஜன் பேட்டி

Harbhajan
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

Net

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் பால் பந்துவீச்சுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ரிஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் பந்து சற்று சாதகமாக அமையும். ஏனெனில் அவர்கள் இந்த பந்தினை முழுவதுமாக பிடிப்பதால் அவர்களால் இந்த பந்தினை எளிதில் பந்துவீச முடியும். ஆனால் சாதாரணமாக விரல்களை பயன்படுத்தி வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தனை பிடிக்க கஷ்டப்படுவார்கள்.

Kuldeep

மேலும் இந்தியாவில் குல்தீப் யாதவ் மட்டுமே ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் அவரால் இந்த பந்தை எளிதாக பயன்படுத்த முடியும். இருப்பினும் அணி தேர்வு குறித்து நான் எதுவும் கருத்து கூற முடியாது அது அணி நிர்வாகத்தின் முடிவாகும். ஆனால் இதுபோன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை சமாளிப்பது எளிதான விஷயம் கிடையாது.

Pink-ball

இருள்சூழ்வதற்குள் வேகப்பந்துவீச்சாளர் எதிரணிக்கு போதுமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள் பந்து அதிகமாக கலர் பூசப்பட்டு இருப்பதால் பிடிமானம் எளிதாக கிடைக்காது. குறிப்பாக விரல்களை பயன்படுத்தி வீசும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக அளவில் பிரச்சனை இருக்கும் கையிலிருந்து வழுக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் பனிபொழிவில் பந்துவீசுவதும் கடினம் என்றும் ஹர்பஜன் கூறினார்.

Advertisement