
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக ஹார்திக் பாண்டியா திகழ்ந்ததால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது ஆறாவது வீரராக களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 59 குவித்து அசத்தினார்.
அதேபோன்று பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆசிய கோப்பை தொடரில் அடைந்த காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்த ஹார்டிக் பாண்டியா எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரின் மீது இருந்தது.
இவ்வேளையில் அவரது சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவின் இந்த செயல்பாடு குறித்து பாராட்டு தெரிவித்துள்ள முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் :
நேற்றைய போட்டியில் இந்திய அணி நல்ல நிலையை எட்ட ஹார்டிக் பாண்டியா ஒரு முக்கியமான காரணம் என்பேன். ஏனெனில் ஹார்டிக் பாண்டியா மட்டும் அப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாட வில்லை என்றால் நிச்சயம் இந்திய அணி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது. 175 ரன்கள் என்கிற இலக்கு இருந்ததால் நம்மால் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது.
இதையும் படிங்க : புவனேஸ்வர் குமார் போல திறமையான அர்ஷ்தீப்.. அந்த வாய்ப்பை உறுதி செஞ்சுட்டாரு.. ஆகாஷ் சோப்ரா
அவர் ஆடிய அந்த இன்னிங்ஸ்தான் இந்த போட்டிக்கான முமென்டத்தை கொடுத்தது என்று நினைக்கிறேன். ஹார்டிக் பாண்டியாவின் இந்த செயல்பாடு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.