- Advertisement -
ஐ.பி.எல்

என்னுடைய கடைசி ஐ.பி.எல் இது கிடையாது. நான் இன்னும் பிட்டாத்தான் இருக்கேன் – சி.எஸ்.கே வீரர் தெளிவு

இந்திய அணிக்காக 1998 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஹர்பஜன் சிங். தனது 17 வயதில் இருந்து இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தற்போது வரை ஓய்வினை அறிவிக்காவிட்டாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் என அனைத்திலும் அசத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு மேலாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி பல சாதனைகள் படைத்துள்ளார் .

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்தது. உடனடியாக இருகரம் கூப்பி அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துக்கொண்டது. கடந்த இரண்டு வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 40 வயதாகும் இவர் வெகு சீக்கிரத்தில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று வதந்தி கிளம்பியுள்ளது.

- Advertisement -

மேலும் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இவரது கடைசி ஐபிஎல் தொடர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருந்ததே இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார். ஹர்பஜன்சிங் அவர் கூறுகையில்…

நம்முடைய திறமையை எப்போதும் வயது தடுத்து விடாது. விளையாட்டு என்பது உடல் தகுதி குறித்தது. பிட்னஸ் இருந்தால் எத்தனை வயது வரை கூட விளையாடலாம். நான் தற்போது சரியான உடல் தகுதியுடன் இருக்கிறேன். எத்தனை வருடம் வேண்டுமானாலும் எனது விருப்பம் போல் விளையாடுவேன்.

இது எனது இறுதி ஐபிஎல் தொடர் கிடையாது. கொரோனாவால் கிடைத்துள்ள இந்த ஓய்வு நேரத்தில் உடற்தகுதியினை மேபடுத்தி வருகிறேன்.2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேன். அந்த அளவிற்கு தற்போது எனக்கு பிட்னஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

- Advertisement -
Published by