சேலஞ்ச ஏத்துகிறேன் – நேரலையில் பாகிஸ்தானிடம் இந்தியாவை விட்டு கொடுக்காமல் பேசிய ஹர்பஜன், நடந்தது என்ன

Harbhajan
- Advertisement -

எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தானுக்கு செல்வதையும் 10 வருடங்களாக அந்நாட்டுடன் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. மேலும் 10 வருடங்களாகியும் பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையில் வரும் 2023இல் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அறிவித்தது அந்நாட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆசிய கவுன்சிலின் புதிய தலைவராக கடந்த சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியது.

Jay-shah

- Advertisement -

ஆனால் தற்போது அவர் இவ்வாறு பேசியுள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் வாரியம் நீங்கள் எங்களது நாட்டுக்கு வரவில்லையெனில் அதே 2023இல் உங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் பங்கு போடும் நிலையில் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடாக இருப்பதாலும் ஐசிசியை விட பணக்கார வாரியமாக இருப்பதாலும் இந்த விஷயத்தில் இந்தியாவை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பாகிஸ்தான் வாரியத்திற்கு சில முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

ஹர்பஜன் சேலஞ்:
மேலும் 2023 உலக கோப்பையில் பங்கேற்கவிட்டால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணமும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். முன்னதாக கடந்த வருடம் பாகிஸ்தான் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஷ் ராஜா இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டில் எந்த நாடும் செயல்பட முடியாது என்றும் அவர்களை பாகிஸ்தான் சார்ந்துள்ளது என்றும் வெளிப்படையாக பேசியிருந்தார். அந்த நிலையில் பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் 2023 ஆசிய கோப்பை விவகாரத்தை விவாதிக்கும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் அதை சுட்டிக் காட்டினார்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் டிவி தொகுப்பாளர் ஆசிய கோப்பைக்கு தான் வர மாட்டீர்கள், வருங்காலங்களில் பாகிஸ்தானில் ஐசிசி உலக கோப்பை நடந்தால் அப்போதும் வர மாட்டீர்களா என்று சவாலை விடுத்தார். அது இந்திய அரசு மற்றும் பிசிசிஐ கையில் இருப்பதாக தெரிவித்த ஹர்பஜன் அப்படி ஒரு நிலைமை வந்தால் பாகிஸ்தானில் உலகக் கோப்பையை நடத்த முடியாத அளவுக்கு தேவையான மாற்றங்களை பிசிசிஐ செய்யும் என்று மறைமுகமாக எச்சரித்து சவாலையும் ஏற்றுக் கொண்டார். இது பற்றி காரசாரமாக நடந்த விவாதத்தில் ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாகிஸ்தான் வாரியத்தில் அதிகப்படியான பணம் இல்லாததால் நாம் பிசிசிஐயை எதிர்பார்க்க வேண்டியுள்ளது என்று ரமீஷ் ராஜா கடந்த வருடம் தெரிவித்தார். அந்த வகையில் மறைமுகமாக பிசிசிஐ கொடுக்கும் பணத்திலேயே பாகிஸ்தான் வாரியம் இயங்குகிறது. அந்த நிலையில் இந்தியாவுக்கு நீங்கள் வரக்கூடாது என்று விரும்பினால் வராதீர்கள். யார் உங்களை அழைத்தார்கள்? எங்களது நாட்டில் நடைபெறும் ஐசிசி தொடரில் பங்கேற்காதது உங்களது முடிவு. ஆனால் உங்களது நாட்டில் எங்களது வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் நாங்கள் அனுப்ப முடியாது” என்று கூறினார்.

Harbhajan-Singh

அதற்கு தொகுப்பாளர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “எங்களது நாட்டில் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளது தான். ஆனால் பாகிஸ்தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட்டால் இயங்க முடியுமா? இங்கே பாகிஸ்தானுக்கு இந்தியா வராது என்று ஹர்பஜன் சார் உறுதியாக தெரிவிக்கிறார். இந்த இடத்தில் நான் ஒரு சவால் விடுகிறேன். அதாவது ஒருவேளை பாகிஸ்தானில் உலகக்கோப்பை நடந்தால் கூட இந்தியா வராதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

அந்த சவாலை ஏற்று ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “உங்களது சவாலை ஏற்றுக் கொள்கிறேன் நண்பா. ஆனால் இந்திய கிரிக்கெட்டை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு பாகிஸ்தானின் தயவு தேவையில்லை. உங்களுடன் பிரச்சனை இருப்பதாக ஏற்கனவே நாங்கள் சொல்லி விட்டோம். அதனால் அரசு அனுமதியளித்தால் நாங்கள் வந்து விளையாடுவோம். இது பற்றிய முடிவு என்னுடைய கையில் இல்லை. இரு நாட்டுக்குமிடையே உறவு சரியாக இருந்தால் போட்டிகளை நடத்துவதற்கான முடிவை அதிகாரிகள் எடுப்பார்கள். அதேசமயம் வரலாற்றில் இந்தியாவுக்கு வந்த எந்த அணியும் பிரச்சனையுடன் விளையாடியதாக சரித்திரம் இல்லை” என்று கூறினார்.

Advertisement