இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னை ஒரு ஜாம்பவான் பந்து வீச்சாளராக நிரூபித்து விட்டார். இருப்பினும் தன்னை அணியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் தன்னிடம் பேசி இருக்கலாம் என்று அவர் மனம்வருந்தி பேசியுள்ளார்.

எல்லா கிரிக்கெட் வாரியங்களிலும் இந்த நடைமுறை உண்டு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பெரிய வீரரை நீக்கும் முன் அவரிடம் பேசி தெளிவுப்படுத்தி பிறகு முடிவெடுப்பார்கள். ஆனால் இந்திய அணியில் மட்டும்தான் அந்த வழிமுறை எப்போதும் இல்லை இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் ஹர்பஜன் சிங் இது குறித்து பேசும்போது :
ஒரு வீரராக 100 டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாட்டுக்காக ஆடுவது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் படைத்தவன் என்பதை மறுக்கவில்லை ஆனாலும் என்னுடைய பார்ம் கொஞ்சம் சரிந்து இருந்து எதிர்பார்ப்புக்கு இணங்க நான் பந்து விசாமல் இருந்திருந்தால் என்னை அணியில் இருந்து நீக்கி இருக்கலாம்.

ஆனால் இவற்றை எதுவுமே செய்யாமல் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை தந்தது. ஆனால் என்னிடம் வந்து யாரும் எனது நீக்கத்தை பற்றி பேசவும் இல்லை. மேற்கிந்திய தீவுகளில் இருந்து வரும்போது 400 விக்கெட்டுகளோடு திரும்பினேன். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை.
கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் கூட 6 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஆனால் அந்த தொடரை நாம் இழந்தோம். அதன் பிறகு இந்திய அணிக்கு ஆடவே இல்லை எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. அதேபோல் சேவாக், லட்சுமணன், கம்பீர் ஆகியோர் நல்ல ஜாம்பவான் வீரர்கள் அவர்கள் அனைவரும் பிரியாவிடை போட்டிக்கு தகுதியான சிறப்பான வீரர்கள்.

ஆனால் நாமே இவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. பின்னர் வெளியில் இருக்கும் வீரர்கள் எவ்வாறு மதிப்பார்கள் என்று ஆதங்கமாக பேசினார். எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என்று இவ்வாறு ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.



