- Advertisement -
ஐ.பி.எல்

தோனிக்கு தான் உண்மையான ரசிகர்கள் இருக்காங்க.. மத்தவங்க பணத்துக்காக அங்க இருப்பாங்க.. ஹர்பஜன்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையால் நிறுத்தப்பட்டிருந்த அத்தொடர் மே 17ஆம் தேதி மீண்டும் பெங்களூருவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் வெள்ளை ஜெர்சியை அணிந்து வந்து மரியாதை செய்தனர்.

மழையால் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்ட போதிலும் நிறைய ரசிகர்கள் விராட் கோலிக்காக வெள்ளை ஜெர்ஸியை அணிந்து கடைசி வரை மைதானத்தில் காத்திருந்தது நெஞ்சை தொடுவதாக அமைந்தது. ஆனால் அப்படிப்பட்ட அதே ரசிகர்கள் கடந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் தோனியை மிகவும் இழிவாக கிண்டல் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது 2016, 2017 வருடங்களில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை பெற்றன.

- Advertisement -

ஹர்பஜன் சாடல்:

அதை வைத்து கைதி போன்ற உடையில் தோனி மற்றும் சிஎஸ்கே பெயரை எழுதி ஆர்சிபி ரசிகர்கள் மோசமாக கிண்டல் செய்தனர். அதே போல மும்பை அணியையும் கடந்தக் காலங்களில் ஆர்சிபி ரசிகர்கள் பலமுறை கிண்டல் செய்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தற்சமயத்தில் தோனிக்கு தான் உண்மையான ரசிகர்கள் இருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மற்ற ரசிகர்கள் பணத்திற்காக சமூக வலைதளங்களில் இதர வீரர்களை தாக்கி பேசுவதற்காகவே இருப்பதாகவும் ஹர்பஜன் சாடியுள்ளார். இது பற்றி ஜியோஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி தாம் விரும்பும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாடுவதை விரும்புகிறார்கள். அவருக்குத்தான் உண்மையான ரசிகர்கள் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்”

- Advertisement -

உண்மையான ரசிகர்கள் யார்:

“மற்ற ரசிகர்கள் அனைவரும் சமூகவலைதளங்களில் இருக்கிறார்கள். அதில் பலர் பணத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறார்கள். அவர்களை விடுங்கள் ஏனெனில் அவர்களைப் பற்றி பேசினால் இந்த விவாதம் வேறு கோணத்தில் சென்று விடும். என்னைப் பொறுத்த வரை சிஎஸ்கே அணிக்கு தான் உண்மையான ரசிகர்கள் இருப்பதாக தெரிகிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ந்து போன லக்னோ அணியின் ஓனர் – விவரம் இதோ

அதை அருகிலிருந்து கேட்டு சிரித்த மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “நீங்கள் சொல்வதும் சரியே” என்று கூறினார். இதைப் பார்க்கும் விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள் அப்படியானால் நாங்கள் உண்மையான ரசிகர்கள் இல்லையா? என்று ஹர்பஜன் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே போல ரோஹித் சர்மா, மும்பை உள்ளிட்ட மற்ற எதிரணி ரசிகர்களும் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -