எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத 3 தருணங்கள் இவைதான் – மனம்திறந்த ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக கிட்டதட்ட 15 வருடங்கள் இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது தனது நீண்ட நெடிய கிரிக்கெட் பயணத்தில் தனக்கு பிடித்த மூன்று மிகச்சிறந்த வெற்றிகள் பற்றி தெரிவித்துள்ளார் அவர். 1999 ஆம் ஆண்டு தனது 18 வயதில் அறிமுகமான ஹர்பஜன்சிங் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது 19 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதுவே இவருக்கு முதல் பிடித்த போட்டி. அடுத்ததாக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியியும், மூன்றாவதாக 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியையும் அவருக்கு பிடித்த போட்டிகளாக ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று போட்டிகள் தான் தனக்கு பிடித்த மிகச்சிறந்த போட்டிகள் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தினையும் தற்போது அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…
2001ஆம் ஆண்டு எனது 20 வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடர் தான் எனக்கு முதன்முதலில் பிடித்த தொடர் இதன் காரணமாகத்தான் நான் ஒரு சர்வதேச வீரராக மாறினேன்.

அதன்பின்னர் ஒரு வீரராக எப்படியாவது உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் ஆசையோடு நானும் காத்துகொண்டு இருந்தேன். 2011ஆம் ஆண்டு நான் நினைத்தது நிறைவேறியது அதனால் இந்த உலக கோப்பை வெற்றியை 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு இணையாக கருதுவேன்.

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரும் நான் நம்ப முடியாத வெற்றியாகும். அந்தத் தொடர் முடிந்து விட்டு இந்தியா திரும்பும் போது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. அப்படிப்பட்ட ஒரு ஆதரவை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. இந்த மூன்று போட்டிகளில் தான் என் மனதை தொட்ட போட்டிகள் ஆகும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்சிங்.

Advertisement