- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானில் நேரத்தை வீணடிக்காம இதை செய்ங்க.. கேரி கிர்ஸ்டனுக்கு ஹர்பஜன் நெகிழ்ச்சியான அழைப்பு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏனெனில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் அவமான தோல்வியை பதிவு செய்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்கள் அடிக்க முடியாமல் டி20 உலகக் கோப்பையில் 7வது முறையாக பாகிஸ்தான் தோற்றது.

அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் வென்றும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது. அந்த அணியின் இந்த தோல்விக்கு பாபர் அசாம் உள்ளிட்ட அனைவருமே சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமானது. அதனால் பயிற்சியாளர்களை மட்டும் விட்டுவிட்டு மொத்த அணியையும் மாற்ற வேண்டுமென ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தானில் இருக்காதீங்க:
முன்னதாக 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இத்தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. அந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படி அவர் கூறியது கருத்து உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் 2011 உலகக் கோப்பையை வென்ற நீங்கள் மீண்டும் இந்திய அணியுடன் வந்து பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்று அவருக்கு ஹர்பஜன் நெகிழ்ச்சியான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அங்கே உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள்”

இதையும் படிங்க: சத்தியமா இதுமாதிரி ஒரு டீமை நான் பாத்ததே இல்ல.. பாகிஸ்தான் அணியை விமர்சித்த – பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன்

“கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரம். மகத்தான பயிற்சியாளர் ஆலோசகர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் 2011 அணியில் எங்களுடைய அன்பான நண்பர். நாங்கள் 2011 உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர். கேரி ஸ்பெஷல் மேன்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சி நியமிக்கப்பட உள்ளார். எனவே கேரி கிர்ஸ்டன் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அதை விட இந்திய ரசிகர்களுக்கு வேறு மகிழ்ச்சி இருக்காது.

- Advertisement -