
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. கடந்த இருமுறையும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்க காத்திருக்கிறது.
அதேபோன்று கடந்து இருமுறையும் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய ஆஸ்திரேலிய அணியானது மீண்டும் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதல் டெஸ்ட் போட்டியானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றி குறித்து கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்வதற்கு 50-50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை சந்தித்தது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன்.
இருப்பினும் இந்திய அணியில் புஜாரா போன்று பந்தை பழையதாக்கி விளையாடும் வீரர் நமக்கு தேவை. கேஎல் ராகுல் அதிகளவு விமர்சிக்கப்பட்டாலும் அவர் ஒரு கிளாசிக் பிளேயர். எனவே இந்த தொடரில் 50-50 வெற்றி சதவீத வாய்ப்பு நமக்கு இருப்பதாக கருதுகிறேன். ஆனாலும் ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுவதால் பலமாக இருப்பார்கள்.
இதையும் படிங்க : 61/1 டூ 117க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தான் பரிதாப சொதப்பல்.. 7க்கு 7.. ஆஸி உலக சாதனை வெற்றி
இந்த தொடரின் ஆரம்பத்தில் நாம் நல்ல துவக்கத்தை பெற முடியவில்லை எனில் தொடர் முழுவதும் போராட வேண்டி இருக்கும். அதனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.