ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் தலைநகர் டெல்லியில் ஜனவரி 30ஆம் தேதி துவங்கிய போட்டியில் ரயில்வேஸ் அணியை டெல்லி எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ரயில்வேஸ் 241 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்யும் டெல்லி முதல் நாள் முடிவில் 41-1 என விளையாடி வருகிறது.
எனவே இரண்டாவது நாளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி களமிறங்குவதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடைசியாக 2012ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். எனவே 12 வருடங்கள் கழித்து விளையாடும் அவரை பார்ப்பதற்காக டெல்லி மைதானத்தில் முதல் நாளிலேயே 15000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளாக சேர்ந்து ஆதரவு கொடுத்தனர்.
எப்போவும் கிங் தான்:
இந்நிலையில் அழுத்தத்தைப் பற்றி கவலைப்படாமல் விராட் கோலி மகிழ்ச்சியுடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் 3 – 4 மணி நேரம் நங்கூரமாக விளையாடினால் விராட் கோலிக்கு தாமாக ரன்கள் வரும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி ரோல் மாடல். இளம் வீரர்கள் அவரை பார்ப்பார்கள். அவர் ரன்கள் அடிக்கிறார் இல்லை என்பது வேறு விஷயம். நான் விராட் கோலியாக இருந்தால் மகிழ்ச்சியுடன் விளையாடுவேன். கிரிக்கெட்டை நாங்கள் மகிழ்ச்சியான விஷயமாக எதிர்கொண்டதாலேயே அதில் விளையாடத் துவங்கினோம். அங்கே விராட் கோலி போன்ற உச்சத்தை நீங்கள் தொடும் போது அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு முதல் இருக்கையைப் பிடித்துக் கொள்ளும்”
ஹர்பஜன் அட்வைஸ்:
“மகிழ்ச்சி என்பது கடைசி இருக்கையை பிடித்துக் கொள்ளும். எனவே விராட் கோலி கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். களத்திற்கு அவர் செல்லும் போது அதைப் பிடித்துக் கொண்டு அங்கே 3 – 4 மணி நேரம் விளையாட வேண்டும். விராட் கோலி 0 ரன்கள் எடுத்தால் கூட அவர் விராட் கோலியாகவே இருப்பார். அவர் எந்த வகையிலும் குறைந்த வீரராக மாற மாட்டார்”
இதையும் படிங்க: தோனிக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச பெஸ்ட் கேப்டன் இவர்தான்.. ரவிச்சந்திரன் அஷ்வின் – அளித்த பதில்
“அவருடைய சாதனைகள் பெரிதாகவே இருக்கும். எனவே அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் களத்தை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். அதைச் செய்தால் அவர் ரன்கள் அடிப்பார்” என்று கூறினார். ரஞ்சிக் கோப்பையை முடித்துக் கொண்டு அடுத்ததாக விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



