அது ஸ்டீவ் பக்னர் ஆஸிக்காக 12வது வீரராக அறிமுகமாகி இந்தியாவை வீழ்த்திய தொடர்.. குமுறிய ஹர்பஜன்

harbhajan singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களுக்கும் முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் என்பது பிடிக்காத பெயராக இருக்கும் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக அவர் தவறான தீர்ப்புகளை வழங்கி குறைந்தது 2 – 3 சதங்களை பறித்திருப்பார். அது போக இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் பகல் கொள்கையைப் போல் அவர் வழங்கிய அநியாய தீர்ப்புகள் சில வரலாற்று வெற்றிகளையும் பறித்தன.

அதன் உச்சமாக 2008 சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங், சைமண்ட்ஸ் ஆகியோர் தோனியிடம் எட்ஜ் முறையில் கேட்ச் கொடுத்தார்கள். ஆனால் அது தெளிவாக தெரிந்தும் ஸ்டீவ் பக்னர் அவுட்டில்லை என்று அறிவித்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் அது ஸ்டீவ் பக்னர் ஆஸ்திரேலியாவின் 12வது வீரராக அறிமுகமாகி இந்தியாவை தோற்கடித்த தொடர் என்று அப்போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

12வது ஆஸ்திரேலிய வீரர்:

அந்த பழைய நினைவு பற்றி அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் நிறைய எட்ஜ்கள் இருந்தன. ஆனால் பக்னர் சார் எதையும் வழங்கவில்லை. நாங்கள் கேட்டும் கிடைக்கவில்லை. ரிக்கி பாண்டிங் தெளிவாக அவுட் என்று தெரிந்தும் கொடுக்கவில்லை”

“அந்தத் தொடரில் பக்னர் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு 12வது வீரராக விளையாடி நன்றாக உதவி செய்தார். ஸ்னிக்கோவில் பெரிய ஸ்பைக் தெரிந்தும் பாண்டிங்கிற்கு எதிராக அவர் அவுட் கொடுக்கவில்லை. அதே போல சைமன்சுக்கு எதிராக தோனி ஸ்டம்ப்பிங் செய்தார்”

- Advertisement -

வருந்திய பக்னர்:

“அவருடைய கால் வெளியே காற்றில் இருந்த போது பெய்ல்ஸ் நீக்கப்பட்டது. ஆனாலும் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிராக ஒரு இடத்தில் அவுட்டே இல்லை. ஆனால் ரிக்கி பாண்டிங் கையை உயர்த்தியதற்காக மற்றொரு நடுவர் பென்சன் இந்தியாவுக்கு எதிராக அவுட் கொடுத்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சிராஜ் என்கிட்ட வந்து இதை இனிப்பா சொன்னாரு.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. டிராவிஸ் ஹெட் பேட்டி

மொத்தத்தில் அந்த காலங்களில் டிஆர்எஸ் ரிவ்யூவும் இல்லாததால் பக்னர் போன்ற அம்பயர்கள் பலமுறை இந்தியாவின் வெற்றிக்கு பாதகமாக அமைந்தார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக இந்திய அணிக்கு எதிராக தாம் அந்தப் போட்டியில் தவறான தீர்ப்புகளை வழங்கியது உண்மை தான் என்று ஸ்டீவ் பக்னர் 2020ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டிருந்தார். அந்தத் தீர்ப்புகள் இந்தியாவின் வெற்றியை பறித்தது தமக்கு இன்னும் வருத்தத்தை கொடுப்பதாக பக்னர் கூறியிருந்தார்.

Advertisement