
ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக தேர்வுக்குழு ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கழற்றி விட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்துச் சென்றார்.
மேலும் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள அவருக்கு ஆசிய கோப்பையில் ரிசர்வ வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டுள்ளார். அது போக வேகப்பந்து வீச்சுத் துறையில் இதற்கு முன் சுமாராக விளையாடிய ஹர்ஷித் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் முகமது சிராஜை இந்திய அணி கழற்றி விட்டது தவறான முடிவு என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். 2023 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை தெறிக்க விட்ட சிராஜ் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
எனவே வேகப்பந்து வீச்சுத் துறையில் துருப்புச் சீட்டாக இருக்கக்கூடிய சிராஜை தேர்வுக்குழு கழற்றி விட்டது குறித்து ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “சிராஜ் பெயர் ஆசியக் கோப்பையில் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சமீபத்திய டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக பௌலிங் செய்தார். ஆம் அவர்கள் இங்கிலாந்தில் நிறைய பவுலிங் செய்தார், ஆனால் தற்போது அவருக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளது”
“அதனால் ஆசிய கோப்பையில் அவரை சேர்த்திருந்தால் இந்திய அணி இன்னும் பலமாக இருந்திருக்கும். பவுலிங் துறை இன்னும் பலமாக மாறியிருக்கும். எனவே சிராஜ் கொண்டு வரக்கூடிய துருப்புச்சீட்டை இந்திய அணி மிஸ் செய்துள்ளதாக நான் கருதுகிறேன். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்திருப்பார் என்று நான் நினைத்தேன்”
இதையும் படிங்க: வெறும் 1 போட்டி 10.18 எக்கனாமி.. சிராஜை கழற்றி விட்ட கம்பீரின் அரசியல் தேர்வு ராணா.. ரசிகர்கள் சாடல்
“நிறைய ரன்கள் அடித்துள்ள அவர் கடந்த ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தார். அதனால் அவருடைய பெயர் இருக்கும் என்று நான் நினைத்தேன். யாருக்கு பதிலாக அவர் விளையாட வேண்டும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இல்லாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக அமைந்துள்ளது” என்று கூறினார்.