இந்தியாவை விட பாகிஸ்தான் மேட்ச் முக்கியமா? எங்கள மாதிரி வெளியேறுங்க.. பிசிசிஐயை விமர்சித்த ஹர்பஜன்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய அணி எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி வருகிறது. அந்த சூழ்நிலையில் இந்திய சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. அந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

நாட்டை விட மேட்ச் முக்கியமா:

அதனால் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய முன்னாள் வீரர்கள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக லீக் மற்றும் செமி ஃபைனலிலும் விளையாடாமல் விலகினார்கள். அந்த சூழ்நிலையில் 2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிசிசிஐ அனுமதியுடன் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டை விட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முக்கியமா? என்று ஹர்பஜன் சிங் பிசிசிஐயை விமர்சித்துள்ளார். எனவே தங்களைப் போல் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் இந்தியா வெளியேற வேண்டும் என்றும் ஹர்பஜன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் (பிசிசிஐ) எது முக்கியம், எது முக்கியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:

“என்னைப் பொறுத்த வரை எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் தங்களுடைய குடும்பத்தை அடிக்கடி பார்க்க மாட்டார்கள். சில சமயங்களில் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து வீடு திரும்ப மாட்டார்கள். எனவே அவர்களின் தியாகம் தான் நாம் அனைவருக்கும் மகத்தானது. நம்முடைய அரசும் ரத்தம் மற்றும் வியர்வைக்கு இணையானது கிடையாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். எல்லையில் நமக்கிடையே சண்டை மற்றும் பதற்றம் இருக்கும் நிலையில், நாம் கிரிக்கெட்டில் விளையாட செல்கிறோம்”

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் விராட் கோலியை முந்தி சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர் – விவரம் இதோ

“உண்மையில் அந்த பெரிய பிரச்சனை தீர்க்கப்படாத வரை கிரிக்கெட் என்பது வெறும் சிறிய விஷயம். நாடு தான் நமக்கு எப்போதும் முதலாவதாக வர வேண்டும். நாட்டை விட கிரிக்கெட்டில் விளையாடுவது பெரிது கிடையாது. நாட்டை விட வீரர், நடிகர் உட்பட யாரும் பெரிது கிடையாது. எனவே நமது கிரிக்கெட்டர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது. நமது ஊடகங்களும் பாகிஸ்தான் விஷயங்களை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement