- Advertisement -
ஐ.பி.எல்

முன் பின் தெரியாத சென்னை நபரிடம் 4 கோடி கொடுத்து ஏமாந்த சி.எஸ்.கே அணியின் சீனியர் வீரர் – அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பண மோசடியில் ஈடுபட்ட பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஒரு செய்தியை இப்பதிவில் காண்போம். இந்த பதிவில் சிஎஸ்கே ஒருவர் சென்னை வாசி ஒருவரிடம் 4 கோடி கொடுத்து ஏமாந்த விடயத்தை தான் பார்க்க இருக்கிறோம்.

அதன்படி சிஎஸ்கே அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான மகேஷ் என்பவரிடம் 4 கோடி கடனாக கொடுத்து அதை தற்போது திரும்பப் பெறாமல் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். கடந்து 2015ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் அறிமுகமான மகேஷ் என்கிற தொழிலதிபருக்கு 4 கோடி ரூபாயை கடனாக வழங்கி உள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகும் கடந்தும் வாங்கியிருந்த பணத்தை மகேஷ் திருப்பி அளிக்கவில்லை.

- Advertisement -

இதனால் சென்னை மாநகர காவல் துறையிடம் ஹர்பஜன்சிங் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அதன் பிறகு 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை மகேஷ் ஹர்பஜனிடம் கொடுக்க அந்த செக்கும் பவுன்ஸ் ஆனது. எனவே தற்போது இந்த விடயத்தை மீண்டும் கையில் எடுத்த ஹர்பஜன் சென்னை மாநகர காவல் துறையில் தொழிலதிபர் முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை நீலாங்கரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் : மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளோம். அதன்படி நடந்த விசாரணையில் மகேஷ் சென்னைக்கு அருகில் இருந்த தாளம்பூரில் உள்ள தனது அசையா சொத்துக்களை பணயமாக வைத்து தான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றதாகவும் அதற்காக திருப்போரூரில் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தான் கடனாக வாங்கிய 4 கோடி ரூபாய் பணத்தை முழுமையாக நான் ஹர்பஜன் சிங்கிற்கு செலுத்தி விட்டதாகவும் தேவையின்றி அவர் திரும்பி என்னிடம் பணம் கேட்கிறார் என்று மகேஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அந்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by