இந்திய அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் திடீர் ஓய்வு முடிவு – ஷாக்கிங் காரணம் இதோ

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் மூத்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிக்க உள்ளார் என்று செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன. இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

harbhajansingh

- Advertisement -

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் வரும் 20-ஆம் தேதிக்குள் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் பிசிசிஐ கட்டுப்பாட்டின் படி இந்திய அணி வீரர் ஒருவர் வெளிநாடு நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்க கூடாது. ஒரு வீரர் ஓய்வு பெற்றால் இந்திய அணி நிர்வாகமான பிசிசிஐ அனுமதி பெற்று வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் விளையாட விரும்பும் ஹர்பஜன் அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தற்போது தனது ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளார். ஏனெனில் 20 ஆம் தேதி அந்த போட்டிக்கான வரைவுப் பட்டியலில் அவர் பெயர் இணைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

harbhajan

அதன் காரணமாக அவர் ஓய்வை அறிவித்து பிசிசிஐயின் அனுமதியோடு அந்த தொடரில் விளையாட ஆசைப்படுவதாகவும் மேலும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால் அந்த போட்டியில் பங்கேற்று விளையாட இருப்பதாகவும் அதன்படி ஹர்பஜன் இந்த ஓய்வு முடிவை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement