இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.! அஸ்வினுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும்.!

harbhajan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்ட்டுள்ளனர். ஆனால் ‘ப்ளெயிங் லேவனின்’ அஸ்வினுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

harbhajan

- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் டி20 தொடரில் இந்திய அணியும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் ப்ளெயிங் லேவனின் அஸ்வினுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் கூறியதாவது “ஒரு சூழல் பந்து வீச்சாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று வந்தால், நான் அணியில் குலதீப் யாதவை தேர்வு செய்வேன். அவர் இதுவரை நடந்த அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். ஆனால், அஸ்வின் வெளி நாடுகளில் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. எனவே அவருக்கு பதிலாக குலதீப் யாதவ் அணியில் ஆடினால் சிறப்பாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

kuldeep

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சைனா மேன் என்ற பெயரையெடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் மெர்லின் இயந்திரத்தை கொண்டெல்லாம் பயிற்சி எடுத்தார்கள். முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் முதல் ஒரு நாள் போட்டியிலும் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement