ஹெட்டை முடிச்சு விடுங்க ஷமி.. அந்த 2 ஆஸியையும் அடக்கிட்டா இந்தியா ஜெய்க்கும்.. ஹர்பஜன் கோரிக்கை

Harbhajan Singh 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. அதில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் பி பிரிவில் 2வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அந்த டாப் 2 அணிகளில் வெற்றி பெற்று ஃபைனல் செல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அவ்விரு அணிகளில் தற்போது உலக சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா எப்போதுமே ஐசிசி தொடர்களில் கில்லியாக செயல்படக்கூடிய அணியாகும். குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளுடன் மிரட்டிய இந்தியாவை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடித்ததை மறக்க முடியாது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு டிராவிஸ் ஹெட்டை சீக்கிரம் அவுட்டாக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:

ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சதத்தை அடித்த அவர் உலகக்கோப்பை ஃபைனலிலும் சதத்தை அடித்து இந்தியாவை தோற்கடித்தார். மேலும் சமீபத்திய டெஸ்ட் தொடரிலும் 2 சதங்கள் அடித்த ஹெட் இந்தியா 3 – 1 என்ற கணக்கில் 10 வருடங்கள் கழித்து தோற்க முக்கிய காரணமானார். எனவே இனிமேலும் அவரை ஆட விடக்கூடாது என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால் பவர்பிளே ஓவர்களில் ஹெட்டை நீங்கள் காலி செய்ய வேண்டுமென்று முகமது ஷமிக்கு ஹர்பஜன் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்லீஷ் ஆகியோரை அதிரடியாக விளையாடக்கூடாது என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இதைச் செய்தாலே இந்தியா வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் சவால்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட் பயத்தை உங்களது மனதிலிருந்து போக்க வேண்டியது முதல் விஷயமாகும். ஹெட்டை விரைவாக அவுட்டாக்க முயற்சி செய்யுங்கள். ஹெட் அதிகமாக ஆடி விட்டார் ஷமி இனிமேலும் அவரை ரன்கள் அடிக்க விடாதீர்கள். 2வதாக ஆஸ்திரேலியாவிடம் கிளன் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்லீஷ் போன்ற பவுண்டரி, சிக்ஸர்களால் வெற்றியை பறிக்கக்கூடிய காட்டடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: இந்தியாவை ஃபைனலுக்கு ஆஸி போக விடமாட்டாங்க.. ரியாக்சனை பாருங்க.. காரணம் இது தான்.. ப்ராட் ஹாடின்

“அவர்களையும் வேகமாக ரன்கள் குவிக்க விடாதீர்கள். 3வதாக இது நாக் அவுட் போட்டி. எனவே நீங்கள் அதிகப்படியாக முயற்சியும் செய்யாதீர்கள். இதுவரை எப்படி விளையாடினர்களோ அப்படியே விளையாட முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார். மொத்தத்தில் 2023 உலகக்கோப்பை தோல்விக்கு இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பி இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Advertisement