இந்தியாவின் ஏ.பி.டி இவர்தான். இவரால் அனைத்து ஷாட்களையும் ஈஸியா ஆடமுடியுது – ஹர்பஜன் புகழாரம்

இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது இந்த அணி கோப்பையை வெல்வதற்கு அணியின் பல முக்கிய வீரர்கள் காரணமாக இருந்தனர். பேட்டிங்கில் குயின்டன் டி காக், ரோகித் சர்மா, கைரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார் குறிப்பாக இளம் வீரர் இஷான் கிஷான் அனைவரையும் மலைக்க வைக்கும் அளவிற்கு விளையாடினார்.

mi

அணியில் மூன்றாவது வீரராக ஆடும் சூரியகுமார் அவர் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் அழுத்தமான நேரங்களில் நன்றாக விளையாடி வெற்றி தேடிக் கொடுத்தார். இந்த வருடம் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் குவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்த தொடர் முழுவதுமே நன்றாக ரன்களை குவித்த அவரின் ஸ்ட்ரைக் ரேட் 145 மற்றும் சராசரி 40 ஆகும்.

இந்திய அணியில் தற்போது வரை இடம்பெறவில்லை என்றாலும் தொடர்ந்து மும்பை அணிக்காக ஒவ்வொரு வருடமும் நன்றாக விளையாடி வருகிறார். மேலும், வித்தியாசமாக ஷாட் ஆடுவதில் இவர் வல்லவர் .

sky 1

இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில்…..சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இந்திய அணியில் இருக்க வேண்டும். தற்போது அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அவர் இந்திய ஆடப் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஆடும் ஆட்டம் அனைவரையும் ஈர்த்து விட்டது.

- Advertisement -

SKY

ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கெரோன் பொல்லார்ட் ஆகிய பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரை இவர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் இவர் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன்சிங்.