நான் தேர்வு செய்யும் ஆல்டைம் லெவன் அணியில் இவருக்கு எப்போதும் இடம் உண்டு – ஹர்பஜன் தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த புஜாரா குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் புஜாரா 3 மூன்று முறை அரைசதம் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pujara 2

புஜாரா குறித்து பேசிய ஹர்பஜன் சிங் : “ ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சட்டீஸ்வர் புஜாரா அதிரடியாக விளையாடினார். புஜாராவின் அரைசதங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது. புஜாராவின் பொறுமையான ஆட்டத்தின் மூலம் தான் இளம் வீரர்கள் அதிரடியாக விளையாட முடிந்தது.

- Advertisement -

இந்திய அணியில் புஜாரா களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் வென்றுவிடலாம். இவர் என் மனம் கவர்ந்த வீரராக மாறி வருகிறார். அதுமட்டுமின்றி எனது ஆல்டைம் லெவலில் புஜாராவிற்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது” என்று ஹர்பஜன் சிங் பாராட்டிப் பேசியிருக்கிறார்.