இந்திய கிரிக்கெட் அணிக்காக 1991 ஆம் ஆண்டிலிருந்து தனது 18 வயதிலிருந்து விளையாடியவர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன்சிங் காலகட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பொற்க்காலம் போன்று இருந்தது. ஹர்பஜன்சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரு முனையில் பந்து வீசினால் கண்டிப்பாக எதிரணி வீரர்கள் ஆடுகளத்தில் தகிடுதத்தம் ஆடுவார்கள். அந்த அளவிற்கு சுழற்பந்து வீச்சில் கையில் வைத்திருந்தவர்கள் ஹர்பஜன்சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் யார் என்பது பற்றி பேசியுள்ளார். குறிப்பாக அவர் இந்த கேள்விக்கு எந்த ஒரு பேட்ஸ்மேன் பெயரையும் கூறவில்லை. மகேந்திர சிங் தோனி ,விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விரேந்தர் சேவாக் என பலர் இருக்கையில் அவர் வித்தியாசமாக பேசியுள்ளார்.
என்னுடைய பார்வையில் அனில் கும்லேதான் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றியாளர். இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த மேட்ச் வின்னர் அவர்தான். எந்த ஒரு பேட்ஸ்மேனையும் அவரது மன தைரியத்தால் வீழ்த்தக்கூடிய வீரர் அனில் கும்ப்ளே. எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்திய அணியை அவர் கைவிட்டதில்லை என்று கூறியுள்ளார் ஹர்பஜன்.

இவர் கூறுவதும் கிட்டத்தட்ட உண்மைதான். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தனது தாடை உடைந்து இருந்த நிலையிலும், களத்திற்குள் இந்திய அணிக்காக பேட்டிங் பிடித்து அந்த போட்டியை டிரா செய்து கொடுத்தவர். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த 2 வீரர்களில் அனில் கும்லேவும் ஒருவர்.

இன்னும் இந்திய வீரர்கள் பலர் அணில் கும்ப்ளே தான் சிறந்த கேப்டன் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இர்பான் பதான் இன்னும் சில ஆண்டுகள் கும்ப்ளே கேப்டன் பதவியில் நீடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



