டெஸ்ட் போட்டியில் கோலியின் 4 ஆம் இடத்திற்கு இவரே கரெக்ட்டா இருப்பாரு – ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் 4 ஆம் இடத்தினை நிரப்பும் வீரர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியோடு கோலி இந்த தொடரில் இருந்து இந்தியா திரும்புவது இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு தான். ஆனால் இது குறித்து நாம் பெரிதளவு சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நம் அணியில் பேட்ஸ்மேன்கள் பலர் அந்த இடத்தை சரி செய்ய சரியான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

Rahul

என்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் கோலியின் நான்காம் இடத்திற்கு சரியாக பொருந்துவார். அவரால் கோலியின் இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாட முடியும். துவக்க வீரராகவோ அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவோ எந்த இடத்தில் இறங்கினாலும் ராகுலால் சிறப்பாக விளையாட முடியும். அவர் ஒரு சிறப்பான வீரர் அதை நான் உறுதியாக நம்புகிறேன் என ஹர்பஜன் சிங் கூறினார்.

மேலும் இந்த தொடரின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்க வேண்டும் என்று தனது யோசனை அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement