சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு வருடமாக விளையாடி வருபவர் ஹர்பஜன்சிங். அதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பத்து வருடங்களாக ஆடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறி விட்டார்.மேலும் தோனியுடன் இந்திய அணியிலும் சில வருடங்கள் விளையாடியிருக்கிறார்.
இந்நிலையில் இலமைக்காலத்தில் தோனியின் சுபாவம் குறித்து பேசியுள்ளார் ஹர்பஜன்சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்…நானும் தோனியும் நிறைய கிரிக்கெட் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கும் ஒரே அணியில் பயணம் செய்து விளையாடி இருக்கிறோம். அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடைய ஒரு நபராவார்
இதன் காரணமாகவே இந்திய அணிக்காக விளையாடும் போது எங்களது அறைக்கெல்லாம் வரமாட்டார். அவர் அறையில் மட்டுமே தங்கிக் கொள்வார். நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கும் போது சச்சின் டெண்டுல்கர், ஜாகிர்கான், ஆசிஸ் நெஹரா, யுவராஜ்சிங், என அனைவரும் சேர்ந்து வெளியே செல்வோம். ஆனால் தோனி அப்படியில்லை மிகவும் அமைதியான மனிதர்.
2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போதுதான் தோனியின் தலைமைப் பண்பு பார்த்தேன். எங்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து நாம் வெற்றி பெறப் போகிறோம் என்று ஊக்கமளித்தார். அந்த தருணத்தில் அதுதான் எங்களிடம் அமர்ந்து பேசவே முயற்சி செய்தார் தோனி.
தற்போது எல்லாம் மாறிவிட்டது .தோனி தலைமைத்துவம் கொண்ட ஒரு நபராக மாறியிருக்கிறார் இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். தோனி குறித்து நாள்தோறும் ஒரு செய்தி வெளியாகி வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் அளித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.