இந்தியா ஊரடங்கு நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு வீரர்களும் சமூகவலைதளத்தில் மற்ற வீரர்களுடனும் தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இதனைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் நேற்று ரோஹித் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தோனி குறித்தும் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நீங்கள் எப்போதும் தோனி இந்தியாவிற்கு ஆடுவாரா மாட்டாரா என்பது குறித்து கேட்டீர்கள். உண்மையை சொல்லப்போனால் அவர் ஆட மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் இந்திய அணிக்கு மீண்டும் ஆட எதிர்ப்பும் இல்லாதது போல் தான் தெரிகிறது என்று கூறி வருகிறார் ஹர்பஜன் சிங்.
தோனி கடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பின்னர் தற்போது வரை எந்த ஒரு விளையாட்டுப் போட்டியில் ஆடவில்லை. தற்காலிக ஓய்வு எடுத்து தனக்குப் பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.அதனை தாண்டி இந்த வருட ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி டி20 அணியில் உலகக் கோப்பை தொடருக்கான இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தால் போல் இருக்கிறது.

ஆனால் ஐபிஎல் தொடரில் தற்போது ரத்து செய்யும் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக அவரது இந்திய அணியில் ஆடும் கனவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று தான் போலிருக்கிறது. மேலும், முன்னாள் வீரர்கள் சேவாக், சுனில் கவாஸ்கர் ஆகியோர் இந்த தோனியை சீக்கிரம் ஓய்வு பெறக் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஹர்பஜன் சிங் தற்போது தோனி கூறாத ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். தோனி எந்த ஒரு இடத்திலும் நான் மீண்டும் இந்திய அணிக்கு ஆட விரும்பவில்லை என்று கூறவில்லை. ஆனால் ஹர்பஜன்சிங் அவர் கூறியதை போல வெளியில் கூறி வருகிறார்.

இதனால் கடுப்பான தோனியின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு எதிராக ஹர்பஜனை இணையத்தில் வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது,.



