இந்திய அணியை மொத்தமாக நாசம் செய்து கங்குலியை வெளியேற்றிய மோசமான பயிற்சியாளர் இவர்தான் – ஹர்பஜன் காட்டம்

Harbhajan
- Advertisement -

2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இவர் மூன்று வருடகாலம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் மோசமான காலம் என்றே கூறலாம்.

Chappell

- Advertisement -

இவர் அணிக்குள் வந்தவுடன் நன்றாக இருந்த அணியை பிரித்தாள தொடங்கினார். அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியை நீக்கி அவரை அணியில் இருந்து தூக்கி விட்டார். அதன் பின்னர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த இர்பான் பதானை ஆல்ரவுண்டர் என நம்பவைத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டார். சச்சின் டெண்டுல்கரை இடம் மாற்றி இறக்கி விட்டார் சுழற்பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி விளையாட வைத்து நாசம் செய்தார்.

இந்நிலையில் இவரது காலகட்டம் குறித்த ஹர்பஜன்சிங் பேசியுள்ளார். அவர் கூறுகையில்… 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது அணியில் ஒற்றுமை இல்லை .நாங்கள் நல்ல அணியாக இருந்தோம். பயிற்சியாளராக இருந்த சேப்பல் எங்களை பிரித்து ஆளத் தொடங்கினார்.

Chappell

கங்குலி கேப்டனாக இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு ராகுல் டிராவிட் திடீரென கேப்டனாக மாற்றப்பட்டு அணியை வழி நடத்தினார். இவை அனைத்திற்கும் காரணம் கிரேக் சேப்பல் தான். அணியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தினார். அவரது எண்ணம் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் அவர் என்னவெல்லாம் செய்ய முயற்சித்தாரோ அதனை அனைத்தையும் செய்தார்.

- Advertisement -

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் மோசமான உலகக் கோப்பை. இந்திய அணியில் ஆடுவதற்கான நேரமில்லை என்று நானே நினைத்துக் கொண்டேன் .தவறான நபர்களின் கைகளில் இந்திய அணி இருந்தது. அந்த உலக கோப்பை தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தோம். ஏனெனில் நன்றாக அணி இருந்தாலும் சரியான மனநிலையில் நாங்கள் இல்லை.

Chappell 1

ஒருவரையொருவர் நாங்கள் நம்பவில்லை இதன் காரணத்தால் தோற்றோம் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்சிங். இந்த உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது இதன் காரணமாக தொடரின் முதல் பாதியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement