அஷ்வின் என் சாதனையை மட்டும் தாண்டிவிட்டால் நிச்சயம் இதனை செய்வார் – ஹர்பஜன் உறுதி

Harbhajan

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி 1- 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ashwin

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : கடந்த போட்டியில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி அஷ்வின் அசத்தினார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மேலும் அவர் தற்போது என்னுடைய சாதனையை நெருங்க இன்னும் சிறிது தூரமே உள்ளது. என்னுடைய 417 விக்கெட்டுகள் சாதனையை டெஸ்ட் போட்டியில் அவர் விரைவில் முடிப்பார். மேலும் அதனை தொடர்ந்து அவர் 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. மேலும் அவர் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

Ashwin

600 விக்கெட்டுகளை அவர் வீழ்த்த நினைப்பார் அது முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அவர் 500 விக்கெட்டுகள் எடுப்பது குறித்து என்னால் உறுதியாக கூற முடியும். அவர் கண்டிப்பாக இந்த சாதனையை படைத்தார் என்று உறுதியாகக் கூறுவேன் என்று ஹர்பஜன் அடித்துக் கூறினார்.