உலகம் முழுவதுமே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸின் ஆதிக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் போட்டிகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. அடுத்து கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இந்த ஓய்வு நேரத்தை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போதைய வீரர்களும் சமூக வலைதளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல முன்னாள் வீரர்கள் தங்களுக்கு பிடித்த ஆல்டைம் பெஸ்ட் லெவன் (11 வீரர்கள்) கொண்ட அணிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அவரது ட்விட்டர் பக்கத்தில் all-time ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் வெளியிட்ட அணியாவது :
1) சச்சின்
2) கங்குலி
3) ரோஹித்
4) விராட் கோலி
5) யுவராஜ் சிங்
6) தோனி
7) கபில்தேவ்
8) ஜடேஜா (அ) ஹர்பஜன்
9) கும்ப்ளே
10) ஜாஹிர் கான்
11) பும்ரா
No sehwag ??? 😳 https://t.co/HOqqAltARq
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 9, 2020
இந்நிலையில் இந்த பட்டியல் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். ஏனெனில் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பதினோரு பேர் வீரர்கள் கொண்ட பட்டியலில் முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள நிலையில் சேவாக்கை சேர்க்கவில்லை. இதனால் துவக்க வீரராக ஏன் ஷேவாக்கை சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Who would you drop to bring Viru in?😀 #HardChoices https://t.co/8xK7UZ793Y
— Wasim Jaffer (@WasimJaffer14) June 9, 2020
இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வாசிம் ஜாபர் : இது தன்னுடைய தனி கருத்து என்றும் இந்தப் பட்டியலில் ஷேவாக்கை உள்ளே கொண்டுவர வேண்டுமென்றால் நீங்கள் யாரை வெளியேற்றுவீர்கள் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.