கொரோனா பாதிப்பிற்காக ஷாஹித் அப்ரிடி செய்த செயல். பாராட்டி தள்ளிய ஹர்பஜன் – வைரலாகும் பதிவு

afridi-harbhajan
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தற்போது ஸ்தம்பித்துள்ளது. சீனாவில் உருவான இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இத்தாலியை ஆகிய நாடுகளை அது கதிகலங்க செய்துள்ளது.

Harbhajan

- Advertisement -

தற்போது அதனையும் தாண்டி இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போய் இருக்கும் நிலையில் தற்போது பல நாட்டு அரசுகளும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மட்டுமின்றி மக்கள் வெளியே செல்லாமல் நிதி நெருக்கடியில் தவிக்கிறது. இதனை சமாளிக்க முடியாமல் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு தேவையான பொருட்களை தெருக்களில் களமிறங்கி இலவசமாக வழங்கி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகித் அப்ரிடி எந்த நேரத்திலும் ஏழைகளுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும், அதுவே நமது கடமையாகும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அப்படி அப்ரிடி ஏழை மக்களுக்கு உதவும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன்சிங் : மனிதநேயம் கொண்ட நீங்கள் செய்யும் பெரிய உதவியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் உங்களது சக்தி அதிகமாகும். உலகின் நன்மைக்காக பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கு பதில் அளித்த அப்ரிடி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி உலகம் ஒன்றுபட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் இதுவே நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் துயர் தீர்க்க அவர் செய்த செயல் தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement