தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹர்பஜன் என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா ? – விவரம் இதோ

Friendship-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக 103 டெஸ்டில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார்.

Harbhajan

- Advertisement -

தான் விளையாடிய காலத்தில் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் அனைத்து கேப்டன்களுக்கு கீழும் விளையாடிய அவர் தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து இவர் தமிழில் ட்விட்டர் நோட்ஸ் மற்றும் தமிழில் பேசி அசத்தி வருகிறார் இதன்காரணமாக சென்னை ரசிகர்கள் அவரை தமிழ் புலவர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது தமிழ் கற்கும் ஆர்வத்தை நிறுத்திவிடாமல் தமிழ் சினிமாவிலும் தனது கால்பதிக்க விரும்பி சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு தற்போது பிரண்ட்ஷிப் என்கிற தமிழ் படத்தின் கதை அவருக்குப் பிடித்துப் போகவே கதாநாயகனாக நடிக்க அந்த படத்திற்கு ஓகே சொல்லி கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

Friendship 1

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட் அடித்து வர தற்போது ஹீரோயினாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்று என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர்கள்தான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த பிரண்ட்ஷிப் படம் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வரும் ஒரு வடமாநில இளைஞராக வரும் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். கதைக்களம் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடக்கிறது. இந்த கல்லூரியில் காலதாமதமாக சேர்ந்து படிக்கும் கல்லூரி இளைஞராக ஹர்பஜன் சிங் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதே கல்லூரியில் படிக்கும் நாயகியாக லாஸ்லியாவும் நடிக்கிறார்கள்.

Friendship

அரசியல், விளையாட்டு என எல்லாம் சேர்ந்து ஒரு கமர்சியல் மசாலாவாக இந்த படம் வெளியாக உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 % முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு லாக்டவுனுக்கு பிறகு நடைபெறும் என்று படக்குழு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement