புல் ஷாட் அடிக்கனும்னா அது இவரால மட்டும்தான் கரெக்ட்டா அடிக்க முடியும் – ஹர்பஜன் யாரை செலெக்ட் பண்ணியிருக்காரு பாருங்க

Harbhajan

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இந்த ஓய்வு நாட்களை வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் தற்போது கிரிக்கெட்டர் குறித்த செய்திகள் குறைவாகவே உள்ளன.

Dekock

இந்நிலையில் தற்போது ஐசிசி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கலவையான விமர்சன பதிலுக்காக இந்திய வீரரான விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரரான பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரது புகைப்படத்தை பகிர்ந்து இந்த நால்வரில் புல் ஷாட்டில் சிறப்பாக விளையாடக் கூடியவர் யார் என்ற கேள்வியை எழுப்பியது.

அதற்கு பலரும் தங்களது பதில்களை தெரிவித்து வர இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா தனது ஆதங்கத்தை தனது பதிலின் மூலம் வெளிப்படுத்தினார். அதாவது என்னுடைய புகைப்படம் ஏன் இதில் இடம்பெறவில்லை என்றும் இதில் என்னை தவிர விட்டுவிட்டீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் புல் ஷாட்டில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய வீரரான ரோகித் சர்மா என்று பதிலளித்துள்ளார். அந்த புகைப்படங்களில் இல்லாத இந்திய வீரரான ரோஹித் சர்மாவை தேர்வு செய்தது தற்போது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் ரசிகர்கள் பலரும் இவர்கள் நால்வரையும் விட அதிரடியாக ஆடும் ரோகித் சர்மாவை ஃபுல் சாட்டில் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மைதானத்திலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ரோகித் சர்மாவிற்கு எதிராக வீசப்பட்டபோது அதை அவர் புல் ஷார்ட் மூலம் சிக்சர் விளாசியது குறிப்பிடத்தக்கது.

புல் ஷாட் அவருடைய தனி ஸ்டைல் மேலும் பல முறை அவ்வாறு சிக்ஸ் அடித்துள்ள ரோகித் சர்மாவை அந்த புகைப்படத்தில் ஏன் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் தங்களது கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.