இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் இவருக்கே தொடர்நாயகன் விருது கொடுக்கனும் – ஹர்பஜன் தேர்வு

Harbhajan
- Advertisement -

டெஸ்ட் போட்டிகளின் சுவாரஸ்யம் ரசிகர்களிடையே குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஐசிசி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்கிற ஒரு சிறப்பான தொடரை உருவாக்கி அதில் அனைத்து அணிகளும் பங்கேற்று விளையாடும் என்றும் கூறியது. மேலும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டியில் நடைபெறும் என என்றும் அறிவித்து இருந்தது.

INDvsNZ

அதனை தொடர்ந்து தற்போது அனைத்து அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி முடிக்க தற்போது இந்த புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கும் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தற்போது ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றது. இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த இறுதிப் போட்டி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால் விக்கெட் கீப்பிங் ரிஷப் பண்டிற்கு தான் தொடர் நாயகன் விருது வழங்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pant

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய பண்ட் அணிக்கு தேவையான ரன்களை குவித்தது மட்டுமின்றி பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி கீப்பிங்லும் அவர் தன்னை முன்னேற்றி உள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் அவருக்கே தொடர் நாயகன் விருது வழங்க வேண்டும். இந்த தொடரில் இந்திய அணி பெற்ற பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Pant

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 41 ரன்கள் சராசரியுடன் 662 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதமும், ஒரு சதம் அடங்கும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கபா டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அதுமட்டுமின்றி இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் சதமடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இப்படி அடுத்தடுத்து இங்கிலாந்து ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ரிஷப் பண்ட் இம்முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அசத்துவார் என்றே எதிர்பார்க்கலாம்.

Advertisement